நிறுவனர் நாள் மற்றும் கல்லூரி நாள் விழா - 2021

    "எண்ணற்ற நலத்திட்டங்களை அதிராம்பட்டினம் பகுதியில் நிறைவேற்றியவர் எஸ் டி எஸ்" என அனைத்து ஜமாத் துணைத்தலைவர் புகழாரம்

    பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனர் நாள் மற்றும் கல்லூரி நாள் விழா 25.02.2021 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பயிலக தாய் சகுந்தலா சோமசுந்தரம் தலைமை தாங்க, கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஏ. முஹைதீன் மரைக்காயர் முன்னிலை வகித்தார்.வருகை புரிந்த அனைவரையும் கல்லூரி தாளாளர் எஸ் டி எஸ் . செல்வம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பி. எம். கே. தாஜுதீன் மற்றும் சென்னை ஜிஹெச் இண்டக்சன் இந்தியப் பிரைவேட் லிமிடெட் நிறுவன உற்பத்தி மேலாளர் வி.ஆனந்த முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் ப்பி.சீனிவாசன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    பட்டுக்கோட்டை ஒன்றிய முன்னாள் துணை பெருந்தலைவர் ஓ. எம். எஸ் சாம்பசிவம் மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினர் பி. எம். கே. தாஜுதீன் தனது உரையில் "முன்னாள் வருவாய் துறை அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள் அதிராம்பட்டினம் பகுதியில் நடைமுறைப்படுத்திய நீர்த்தேக்கத் தொட்டி சாலை வசதிகள் ,பாதாள சாக்கடை திட்டம் போன்றவற்றை சுட்டிக் காட்டியதோடு இன்றும் அந்த திட்டங்கள் மக்கள் மனதில் பதிவாக உள்ளதை குறிப்பிட்டார். கிராமப்புறத்தில் தொழில் கல்வி பயில வாய்ப்பில்லாது இருந்தபோது பட்டுக்கோட்டையில் தொழிற்கல்வி வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தவர் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம். அந்த அற்புத கல்வி நிறுவனத்தை இங்கு படிக்கும் மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

    விழாவில் தேசிய வாக்காளர் நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கொரோனா பேரிடர் காலத்தில் சேவையாற்றிய என்சிசி மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இதன் பின்னர் மாணவ மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிறைவாக மின்னணுவியல் துறை தலைவர் ஏ.அமலோற்பவ செல்வி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்

    நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

adv banner
Top