சர்வதேச எழுத்தறிவு நாள் - 2021

   செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 8.9.2021 முதல் 11.9.2021 வரை பள்ளி மாணவர்களுக்கு ( 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை ) கீழ்கண்ட போட்டிகள் covid-19 சூழ்நிலையை கணக்கில்கொண்டு ஆன்லைனில் நடைப்பெற்றது.

  • ஓவியப்போட்டி
  • கைவினைப் பொருட்கள் செய்தல்
  • புதிய புதிய கண்டுபிடிப்புகள்  போன்ற போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு மாணவர்களிடையே தன்னம்பிக்கையும், புதிய இளையதலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கும் பொருட்டு அமைந்தது சிறப்பிற்குரியது.

   இரண்டாம் கட்டமாக நடைபெற்ற " பள்ளியை நோக்கிய பயணம் " 14.9.2021 மற்றும் 15.9.2021 ஆகிய இரு தினங்களிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் பி . சீனிவாசன் அவர்கள் தலைமையில் ஜேசிஐ பிபிசி கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்து துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் 7 பேர் கொண்ட குழு பள்ளிகளுக்கு சென்று தொழில் கல்வியின் முக்கியத்துவம், எழுத்தறிவின் முக்கியத்துவம் மற்றும் கல்வி இடைநிற்றலை புறக்கணித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

adv banner
Top