முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

       பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா 20.09.2021 திங்கள்கிழமை நடைப்பெற்றது . விழாவுக்கு கல்லூரி முதல்வர் பி . சீனிவாசன் தலைமை வகித்தார் , மின்னணுவியல் துறை தலைவர் ஏ.அமலோற்பவ செல்வி முன்னிலை வகிக்தார் .

       முதல்வர் , மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இணைந்து குத்து விளக்கு ஏற்றினர் . நிகழ்ச்சியில் அமைப்பியல் துறைத் தலைவர் ஜி.மாணிக்கவாசகம் , மின்னியல் துறைத் தலைவர் எம் . துரை , இயந்திர மின்னணுவியல் துறை தலைவர் க.மீனாட்சி சுந்தரம் , இயந்திரவியல் துறை தலைவர் ஆர் . விஜயராகவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர் .

       நிகழ்ச்சியில் நிகழாண்டு வெவ்வேறு துறைகளில் முதலாம் ஆண்டு சேர்ந்திருந்த மாணவ மாணவிகளுக்கும் , அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர் . வேதியியல் துறை விரிவுரை யாளர் எம் . திலகவதி , மாணவ , மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார் . முன்னதாக முதலா மாண்டு துறைத் தலைவர் வி . விஜயராயன் வரவேற்றார் . நிறைவில் இயற்பியல் துறை விரிவுரையாளர் எஸ்.ரமேஷ் நன்றி கூறினார் .

Student Induction Program Conducted in our institution:


adv banner
Top