ISRO வாரவிழா - 2021

       நமது பயிலகத்தின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும மற்றும் மாணவர் மேம்பாட்டு கழகம் மூலமாக ISRO வாரவிழா 8.10.2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

      இளைய விஞ்ஞானிகளை உருவாக்கும் பொருட்டு நமது பயிலகத்தின் மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறை மற்றும் மூன்றாம் ஆண்டு மெக்கட்ரானிக்ஸ் துறை மாணவர்களின் படைப்பாற்றல் காட்சியாக வைக்கப்பட்டன.

       வண்ண வண்ண ராக்கெட்கள் அது ஏவப்படும் தொழில்நுட்பம் என மாணவர்கள் படைப்புகளாக செய்து நன்றாக விளக்கி காண்பித்தனர் . நேற்றைய உலகம், இன்றைய உலகம் மற்றும் நாளைய உலகம் தலைப்பில் மாணவர்களின் படைப்பாற்றல் காண்போரை ஆச்சரியப்பட வைத்தது.

       இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் திரு பி .சீனிவாசன் தலைமை தாங்க கல்லூரியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும ஒருங்கிணைப்பாளர் வி.ராஜன் வரவேற்றார் . மாணவர் மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பாஸ்கரன் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

      

adv banner
Top