வளாக நேர்காணல்

    பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டான் பாஸ்கோ வழிகாட்டி திருச்சி இணைந்து பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 20.11.2021 அன்று வேலைவாய்ப்பு முகாமினை நடத்தியது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் தலைமை தாங்கினார். டிவிஎஸ் சுந்தரம் பிரேக் லைனிங் லிமிடெட் மனிதவள மேலாளர் பொன்ராஜ் கலந்துகொண்டு மாணவர்களை தேர்வு செய்தார்.

    இந்த முகாமில் பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 14 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் கல்லூரியின் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.சதீஷ்குமார் வரவேற்றார். நிறைவாக தேர்வான மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் அமலோற்பவ செல்வி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.adv banner
Top