பரிசு வழங்கும் விழா

       பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் உலக எழுத்தறிவு நாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்றன . போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் எஸ்.பாலச்சந்தர் அவர்கள் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் .

       பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார் . நிகழ்ச்சியில் கல்லூரியின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும ஒருங்கிணைப்பாளர் வி.ராஜன் வரவேற்றார் . வெற்றி பெற்ற மாணவ , மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர் . கல்லூரி துணை மென்பொருளாளர் எஸ்.சுபதர்ஷினி நன்றி கூறினார் .

      

adv banner
Top