உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் - 2021

    பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு திட்டம் மற்றும் மாணவர் மேம்பாட்டு திட்டம் இணைந்து 08.03.2021 அன்று உலக மகளிர் தினம் கொண்டாடியது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி பொருளாளர் திருமதி.கவிதா செல்வம் தலைமை தாங்க, கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி.ஜி.மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த விழாவில் பள்ளி மாணவிகள் சிலம்பாட்டம், சுருள் வீச்சு மற்றும் ரிப்பன் சுற்றல் போன்ற வீர சாகசங்கள் நிகழ்த்தினர்.

    சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை மணிகூண்டு மற்றும் தபால் நிலையம் அருகில் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆசிரியைகள் இனிப்பு வழங்கி உலக மகளிர் தின வாழ்த்தினை தெரிவித்தனர்.adv banner
Top