காசாங்காடு ஊராட்சியில் மகளிர்க்கான கட்டணமில்லா தையல் பயிற்சியினை பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி நடத்துகின்றது.

    இந்தப் பயிற்சி தொடக்க விழாவில் கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ் செல்வம் தலைமை தாங்க, காசாங்காடு ஊராட்சியிணை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் வி.செல்வநாயகி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விசாலாட்சி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் பயிற்சியாளர் மெரியம் சந்திரகலா வரவேற்றார்.

   கல்லூரி முதல்வர் ப்பி.சீனிவாசன் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி .ரெங்கராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத்திட்டம் ஒருங்கிணைப்பாளர் எம்.துரை கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக நடத்தப்படும், இந்த பயிற்சியில் காசாங்காடு அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மகளிர்கள் பயனடையலாம்.

adv banner
Top