சிறுதொழில் பயிற்சி துவக்க விழா - 2021

       நமது கல்லூரியின் மாணவர் மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் திட்டம் இணைந்து மாணவிகளுக்கான சிறுதொழில் பயிற்சி துவக்க விழா 07.10.2021 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி மாணவிகளும் மாணவர் மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

       செல்வி.சுபதர்ஷினி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திருமதி.மகேஸ்வரி அவர்கள் சிறப்புரை வழங்க. இவ்விழாவில் உள்ள மாணவர்களுக்கு சிறுதொழில் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் திருமதி.துர்கா தேவி அவர்கள் விளக்கி கூறினார்.

      அரங்க அமைப்பை திரு.பாஸ்கரன், திரு.கமல்ராஜ் மற்றும் திரு.கலையரசன் ஆகியோர் சிறப்பாக அமைத்தனர். திருமதி.புவனேஸ்வரி அவர்கள் தொகுத்து வழங்க இறுதியாக இவ்விழாவை சிறப்பித்து தந்த அனைவருக்கும் திருமதி. அமலோற்பவ செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

adv banner
Top